தமிழ் தேசியகூட்டமைப்பில் போட்டியிடும் றொபின் 


அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பில் போட்டியிடும் றொபின் தான் பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவாகி சென்றால் எப்படியான வேலைத்திட்டங்களை மேற்கொள்வேன் என்பதை துண்டுப்பிரசுரம்மூலம் மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார் அதில் முக்கியமானது தனது பாராளுமன்ற மாதாந்த முழச்சம்பளத்தையும் அம்பாறை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவேன் எனக்குறிப்பிட்டுள்ளமை முற்போக்கு தன்மை வாய்ந்ததாகும்
அத்துடன்
1.பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு.
2.தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு கல்விச்செலவுக்கான மாதாந்தக்கொடுப்பனவு
3.அரசியல் கைதிகளின் விடுதலை.
4.அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகள்  எப்படிப்பட்ட தேவைகளுக்கு எந்நப்பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை புத்திஐPவிகள் குழு அமைத்து அவர்கள்மூலமே தீர்மானித்து ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல்
5.பொத்துவில் தொடக்கம் சங்கமன்கண்டிவரையிலான தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கி பிரதேசசபையும் பிரதேச செயலகமும் ஏற்படுத்தல்.
6.உலகத்தமிழர்களை இணைத்து எமது மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தல். போன்ற பல் வேறு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top