-முர்சித்-
'அகர ஆயுதம்' அமைப்பினர் மாதாந்தம் நடாத்தும் ''கலை,இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொது வெளி'' யின் ஆறாவது (6வது) அமர்வு புனித ரமழான் மாதத்தை சங்கைப்படுத்தும் முகமாக ''ரமழான் விசேட கவிப்பொழிவும், இப்தார் நிகழ்வும் 12.07.2015 ஞாயிறு அன்று பி.ப. 4.30 மணி முதல் நிந்தவூர் அல் - மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் கேட்போர் கூடத்தில் மிகவும் பிரமாண்டமாக இடம் பெற்றது.

 இன் நிகழ்வு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை பிராந்திய பிரதம பொறியியலாளரும் கவிஞ்சருமான தம்பி லெப்பை இஸ்மாயில் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றதுடன், அஷ்-ஷைக் எம்.எச்.எம் ஹரீஸ் (நளீமி)அவர்களினால் ரமழான் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், கவிப்பொழிவுப்பகுதியில் கவிஞர்கலான -  பீர்முஹம்மட், அபுல் அஹ்லா மௌலானா, கிராமத்தான் கலீபா, பர்சானா ரியாஸ், மக்கீன் ஹாஜி, எழுகவி ஜலீல்,  கே.எம்.ஏ. அசீஸ், மருதநிலா நியாஸ்மற்றும் எஸ். ஜனூஸ் ஆகியோர் கவிதைகளைப் பொழிந்தனர்.

இன் நிகழ்வுக்கு மூத்த எழுத்தாளர்களான எஸ்.முத்துமீரான்,மணிப்புலவர் மருதூர் மஜீத், பாலமுனை பாரூக், ஆசுகவி அன்புடீன் ஆகியோர் உள்ளடங்களாக கிழக்கின் பல பாகங்களிலிருந்தும் மூத்த   மற்றும் இளம் இலக்கியவாதிகள், அறிஞர்கள், சமூகவியலாளர்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகர ஆயுதத்தின்  ''கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின்''யின்  பிரதம   செயற்பாட்டாளர்களான  கவிஞர், அறிவிப்பாளர் எஸ்.ஜனூஸ் மற்றும் கவிஞர்,கிராமத்தான் கலீபா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க,    அகர ஆயுதம் அமைப்பின் விசேட அறிமுக உரையை அகர  ஆயுதத்தின் செயலாளரும், கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் பிரதம செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அஹ்சன் இப்ராஹீம் நிகழ்த்தினார். 

அகர ஆயுதம் அமைப்பின் நிறுவுனரும், கலை இலக்கிய சந்திப்பிற்கும், உரையாடலுக்குமான பொதுவெளியின் பிரதம செயற்பாட்டாளர்களில் ஒருவருமான  இலக்கியன் முர்சித் நன்றியுரைக்க நிகழ்வுகள் இனிதே சலவாத்துடன் முற்றுப்பெற்றது.கருத்துரையிடுக

 
Top