கடந்த இரண்டு வருடங்களாக கல்வி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை எனும் அமைப்பை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் வைபவமும் இப்தார் நிகழ்வும் நாளை திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை அமைப்புக் குழுவின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதன்போது கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவைக்கான நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளதுடன் புதிய உபவேந்தரான பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் கல்விச் சமூகத்தினரால் வரவேற்று கௌரவிக்கப்படவுள்ளார் என அமைப்புக் குழுவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ.அன்சார் மௌலானா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top