(பி.எம்.எம்.ஏ.காதர்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மானை தனது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும், அமைச்சருமான  றிஷாட் பதியுதீன் விடுத்த வேண்டுகோளை தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி அங்கீகாரம் பெற்ற நிகழ்வு  இன்று(22-07-2015)இரவு  7.45 மணியளவில் மருதமுனை கடற்கரையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான  றிஷாட் பதியு தீன் விடுத்த வேண்டுகோள் பற்றி தனது ஆதரவாளர்களுக்கு  இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார் இதனையடுத்து ஆதரவாளர்கள் அனைவரும் ஏகோபித்த முடிவுடன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கு  பூரண அங்கீகாரத்தை வழங்கினார்கள்.
இவ்வாரம் மருதமுனைக்கு வருகை தரும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் தனது ஆதரவாளர்கள் சகிதம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோக பூர்வமாக இணைந்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முழு ஆதரவையும் வழங்கப்போவதாக இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top