(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார்  நிகழ்வு இன்று சனிக்கிழமை(04-07-2015) மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தின்  உள்ளக அரங்கில் கழகத்தின் தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான  எம்.எஸ்.உமர் அலி தலைமையில் நடைபெற்றது.
மாலை 5.45 மணி தொடக்கம் இப்தார் நேரம் வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ் ஷெய்க் எப்.எம்.அகமதுல் அன்ஸார் மௌலானா எம்.ஏ.(நழிமி)அவர்களின் விஷேட இப்தார் சொற்பொழிவு  இடம் பெற்றது. 
கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகீம் அவர்களின் நெறிப்படுத்தலில் நீதிபதிகள். சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள், அசிரியர்கள்.விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top