முஸ்லிம்கள் கடந்த அரசாங்கத்தில் இனவாதிகளால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பதனையும் > தமிழ் சமூகத்தின் ஏகோபித்த தலைவன் என்பதனை தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு உங்களின் தலைமையில் நேர்மையானதும் நியாயமானதுமான முறையில் பிணக்குகள் தீர்க்கப்பட்டு அர்த்த புஷ்டியான முறையில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதை  மீண்டும் வலியுறுத்தி   தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்  இரா .சம்பந்தனுக்கு கல்முனை அஸ்ரப்  வைத்திய சாலை வைத்தியர் வை.எல்.எம்.யூசுப்  மீண்டும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் .

அந்தக் கடிதத்தில்  வைத்தியர் யூசுப் தெரிவித்திருப்பதாவது 

18.06.2015 அன்று நான் உங்களுக்கு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு உங்களின் தலைமையில் நேர்மையானதும் நியாயமானதுமான முறையில் பிணக்குகள் தீர்க்கப்பட்டு அர்த்த புஷ்டியான முறையில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும் எனும் தொனியில் பரிசுத்தமான உள்ளத்தோடு உங்களின் தலைமைத்துவத்தின் கௌரவத்தையும் வயதையும் மதித்து நாகரீகமான முறையில் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு இதுவரையும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்பதனை மிகவும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 
முஸ்லிம்கள் கடந்த அரசாங்கத்தில் இனவாதிகளால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் என்பதனையும் > தமிழ் சமூகத்தின் ஏகோபித்த தலைவன் என்பதனையும் மதித்து இம்மடலை மீண்டும் வரைகிறேன்.
 ஆனாலும் எஸ் அரசரட்ணம் எனும் ஒருவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எஸ் ஜெயக்குமார் > ஏ. விஜயரட்ணம் என்பவர்களும்> மற்றும் செல்லையா இராசையா என்பவரும் இன்னும் சிலரும் எனது நாகரீகமான முறையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு அநாகரீகமான வசன நடையில் விசனத்தோடு பொய்யான கூற்றுக்களை ஆதாரங்களாக காட்டி மறைமுக அச்சுறுத்தல் உணரப்படும் வகையிலும் கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ளதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இவர்களைப்போன்ற ஒருசில தமிழ் சகோதரர்கள்தான் நான்கூறிய தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவின் முக்கியத்துவம் விளங்காதவர்கள.;
நியாயமான  சமாதானத்தையும் சமூக உறவையும் விரும்புபவர்களுக்கு யார் எழுதுகிறார் என்பது முக்கியமல்ல. எழுதப்பட்ட விடயம் நியாயமானதா> உண்மையானதா> தேவையானதா என்பதுதான் முக்கியம். இவர்கள் அப்பட்டமான பொய்யையும் கட்டுக்கதைகளையும் கொண்ட அறிக்கைகளை விடுத்திருப்பது உங்களுக்கு இப்பிரதேசத்தின் உண்மைகளை மூடி மறைக்கும் நோக்கத்திலா அல்லது தமிழ் சமூகம் சார்பான நீதி > அநீதிக்கு அப்பாலான எத்தகைய வாதத்திற்கும் போராட்டத்திற்கும் உங்களின் ஆதரவும் அனுசரணையும் இவர்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா என்று புரியவில்லை. 

இக்கருத்துக்களைக் கூறியவர்களில் இருவர் உங்களின் கட்சியைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினரகள்; என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பொய்யான வாதங்களை நீங்கள் எவ்வாறு விசாரணை செய்து அணுகப் போகிறீர்கள் என்பது முழு இலங்கையர்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்திற்கு உற்று நோக்கிப்பார்க்கும் விடையமாக மாறியுள்ளது எனவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவ்வாறு உண்மையை ஆராய்ந்து அவர்களுக்கெதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்கத்தயங்கினால் தமிழ் சமூகத்தின் போராட்ட வரலாறுகள் பொய்களும் அநீதிகளும் கலக்கப்பட்டு உருவாக்கப்பட்டவையா என்ற சந்தேகத்தை உருவாக்கிவிடும் எனவும் அஞ்சுகிறேன்.
 தமிழ்-முஸ்லிம் இன உறவை ருசிக்கத்தெரியாதவர்களும் தனித்துவ இன ஆதிக்கத்தையும் தன்னகத்தே கொண்டு தாங்களின் தீவிரவாத கொள்கைக்கு போலியான காரணங்களை சமைத்து ஒரு பொய்யை நூறுமுறை மீண்டும் மீண்டும் உரத்துக்கூறினால் அது உண்மையாகிவிடும் என்ற நம்பிக்கையில் தமிழ்-முஸ்லிம் உறவிற்கு சவாலாக இருப்பவர்களும் இவர்களைப்போன்றோரே எனவும் கூறி அதற்கான சில ஆதாரபூர்வமான காரணங்களையும் கூறி இவ்வாறானவர்களைப் புறந்தள்ளி நேர்மையின் அடிப்படையில் சமாதானத்திற்காக உழைக்கக் கூடியவர்களை அரவணைத்துக்கொண்டு நிரந்தர சமாதானத்திற்காக உழைப்பதே சரியானது என நினைக்கிறேன். 

நான் நேசிக்கும் நேர்மைக்காகவும் இன உறவுக்காகவும் எதனையும் இழக்கத் தயாராகவுள்ளேன் என்பதையும்> அச்சுறுத்தும் பண்பும் கோழைத்தனமும் எனது முதல் எதிரி என்பதனையும் மிகத்தாழ்மையாகக்கூறி எனது நியாயப்படுத்தலை ஆரம்பிக்கின்றேன்.

முழு பூசணிக்காயை சோற்றினுள் மறைப்பது போன்று விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு  கட்டிடத்தொகுதியை கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதை நாங்கள் தட்டிப்பறிப்பது போன்ற கருத்தை இவர்கள் முன்வைத்துள்ளார்கள். இதுவே இவர்கள் கூறியவைகளில் பெரும்பாலானவை > ஒருபானைச்சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல் பொய்யானவை என்பதற்கு சிறந்த சான்று. அஷ்ரப்வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்ற கட்டிடத்தொகுதியையே கல்முனை வடக்கு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கப்படுகிறது என்பதை நிருபிக்கத்தயாராகவுள்ளேன். அவர்கள் கூறியவையே உண்மை என்று நிருபித்தால் இக்கட்டிடத்தை கல்முனை வடக்கு வைத்தியசாலைக்;கே வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு அதனைப் பெற்றுக்கொடுக்க நானும் அவர்களுக்காக உழகை;க முன்வருவேன். ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்டதையே அவர்கள் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்கள் என்பது நிருபணமானால் எங்களுக்கு வழங்கப்படுவதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முன்வருவார்களா? என சவால் விடுக்க விரும்புகிறேன்.
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் இந்து ஆலயம் அமைப்பதற்கு நான் தடையாக உள்ளேன் என உங்கள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் ஏ. விஜயரட்னம் கூறியுள்ளார். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க தாய் மறுத்ததனால் குழந்தை அழ ஆரம்பித்ததைக்கண்ட தாதி அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூறியதும் அதனை ஏற்றுக் கொள்ள விரும்பாத அந்தத் தாய் > தாதி குழந்தைக்கு கிள்ளியதாலேயே குழந்தை அழுகின்றது என புளுகி தான் தப்பித்துக் கொள்ள முயற்சிசிப்பது போன்ற ஒரு கதையே ஏ. விஜயரட்னம் அவர்களின் புராணமும் ஆகும். அஷ்ரப் வைத்தியசாலையில் முஸ்லிம் பள்ளிவாசலுமில்லை. இந்துக்கோவிலுமில்லை> இதுவரைக்கும் அவ்வாறான எந்தக்கோரிக்கையையும் யாரும் முன்வைக்கவுமில்லை. வருடாவருடம் வாணிவிழா>சரஸ்வதிபூஜை>ஆயூதபூஜை>போன்ற நிகள்வுகள் அஷ்ரப் வைத்தியசாலையில் நடைபெறுவதையும்  அதில் நான் தவறாது கலந்து கொண்டு சிறப்பிப்பதையும் அதன் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்போது விழங்கும் நான் இனவாதியா அல்லது சகோதரத்துவவாதியா என்று. தமிழ் முஸ்லிம் சகோதர சகோதரிகள் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவுமே வேலை செய்கின்றார்கள். போலி அறிக்கைகளை விடுப்பதை நிறுத்தி இயலுமானால் நான் மறுத்ததாகக்கூறப்படும் ஒருவரை என்முன்னால் கொண்டுவந்து நிரூபிக்குமாறு இவர்களுக்கு சவால் விடுக்கிறேன்.

 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிவாசலை புனரமைப்பு செய்வதைத்தடுத்து கோவிலை மட்டும் புனரமைப்பு செய்ய அனுமதித்த கைங்கரியமே இனவாதத்தின் அறிகுறி எனும் உண்மையை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்கமுடியாது என்பதனை கூற விருப்பமில்லாத போதும் இவ்விடத்திலே அதனைக்கூற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன்.
கல்முனை; பிரதேசத்திலே வாழுகின்ற வைத்தியர்கள்ர> தாதி உத்தியோகத்தர்களில் 75 வீதமானோர் முஸ்லிம்கள். இந்த அஷ்ரப் ஞாபகார்த்தவைத்தியசாலை உருவாக்கப்படாதிருந்திருந்;தால்  இன்று வடக்கு ஆதார வைத்தியசாலையில் வேலை புரியும் ஊழியர்களில் 75 வீதமானோர் முஸ்லிம்களாகவே இருந்திருப்பர். அதாவது  நடைமுறையில் இவ்வைத்தியசாலையின் கட்டுப்பாடு முஸ்லிம்களின் கைகளில்தான் இருந்திருக்கும். அண்மையில் ஒருமுஸ்லிம் சகோதரர் இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்தமையை சகிக்க முடியாமல் அவரை ஆர்ப்பாட்டம் செய்து துரத்திய வரலாறு முஸ்லிம்களின் கையில் இவ்வைத்திசாலை இருந்திருந்தால் அவ்வைத்தியசாலையின் சுமூக செயற்பாடும் தமிழ்-முஸ்லிம் சுமூக உறவும் எவ்வாறு இத்தகையோரைப்போன்றோரால் சீரழிந்திருக்கும் என்பதனை உணர்ந்து கொள்வது கடினமானதல்ல. 

ஆகவே அஷ்ரப்வைத்திய சாலையை உருவாக்கியதில் நன்மையடைந்தவர்கள் இத்தகைய இனவிரோத செயற்பாட்டாளர்களே எனவும் கருத முடியும். இவ்விரு வைத்தியசாலையையும் இணைத்து தரமுயர்த்தி இருசமூகத்திற்கும் கிடைக்கும் நன்மையை அதிகரிக்கச்செய்து சமூகங்களுக்கிடையிலான உறவையும் வளர்ப்போமென்றாலும் அதனைத் தடுப்பவர்களும் இவர்களைப்போன்றோரே. அண்மையில் கௌரவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் வடக்கு வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவ்வைத்தியசாலைக்குழுவின் முஸ்லிம் அங்கத்தவர்கள் 7 பேருக்கு மாத்திரம் அழைப்பு விடுக்காமல் விழாவை நடாத்தியதும் அவர்களின் இன உறவின் கையாடலுக்கு சான்றுபகரும் ஒருவிடயம்தான். இதுபோன்ற பல இனவிரோத உணர்வுகளை மனதில் வைத்துக்கொண்டுதான் உண்மைக்குப் புறம்பான விடயங்களைச் சேர்த்து திரிபு படுத்தப்பட்ட செய்திகளை உலகறியச் செய்கிறார்கள். அதாவது நச்சுப்பாம்பு ஓணானைப் பார்த்து இது ஒரு ஆட்கொல்லி  இதனை அடித்துத் துரத்துங்கள் என்பது போன்ற கூற்றே இவர்களது என்மீதான பாய்ச்சல்.
ஏன் பிரதேச செயலக விடயத்தைப் பார்ப்போமானால் 8500 பேருக்கு லகுகலயில் பிரதேச செயலகம் வழங்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்  உங்களது கட்சியின் மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் எஸ். ஜெயக்குமார்.; இலங்கையிலே > பிரதேச செயலக உருவாக்கத்திற்கு ஆகக்குறைந்த சனத்தொகை எத்தனை இருக்கவேண்டும் என்று எந்த சட்டத்திலோ அல்லது சுற்று நிருபத்திலோ கூறப்படவில்லை. அதாவது  6000 > 6500 சனத்தொகையைக் கொண்ட காரைதீவு  மற்றும் நாவிதன்வெளிக்கும் வழங்கப்படலாம் என்பதுதான் உண்மை. எனது வாதம் இவைகளுக்கும் பிரதேச செயலகம் வழங்கப்படவேண்டும் என்பதல்ல. இத்தகைய பிரிவினைக் காரணங்களை இல்லாது செய்து ஒற்றுமைக்கு வழி சமைப்போம் என்பதுதான் எனது நோக்கம். இதில் இன்னுமொரு உண்மையைப் பார்த்தால்  மூன்றில் இரண்டுபங்கு முஸ்லிம்களுக்கும்  முன்றில் ஒரு பங்கு  தமிழர்களுக்கும் கல்முனையில் கிராமநிலதாரிப்பிரிவு  29 தான். அதாவது இப்பிரிவு  ஏற்படுத்தப்பட்ட அந்தக்காலத்திலேயே தனியான தமிழ் பிரதேச செயலகப்பிரிவிற்கு அடித்தளமிடப்பட்டிருக்கிறதே தவிர  அண்மைக்கால அரசியல்  பாராபட்சம் ஒரு பாரிய காரணமல்ல எனும் உண்மையும் புலப்படும்.

மேலும் தமிழர்களின் வணக்கஸ்தலங்களையும் நிலங்களையும் களவாடியதாகவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். இவ்வுண்மையை ஆராய்ந்தால் முஸ்லிம்கள் கொள்ளை கொடுத்தவர்களே தவிர கொள்ளையடிப்பதில் ஆர்வம் காட்டிய சமூகம் அல்ல எனும் உண்மையும் புலப்படும். எனது வாதமெல்லாம்  யுத்தகாலப்பகுதிக்கு முன்னர் இழந்தவைகளுக்கு சட்ட வலு இல்லை என்பதே பொதுவான யதார்த்தம். இவற்றைத்தோண்டினால் கள நிலவரம் மோசமாகுமே தவிர சுமூகமாகாது. ஆனால் அது நியாயமான முறையில் நடைபெறுமாக இருந்தால் அதுவும் முஸ்லிம் சமூகத்திற்கு வாசியாகவே அமையுமென்பதனையும் ஒரு வாத நியாயப்படுத்தலுக்காக கூறிக்கொள்ள விரும்புகிறேன். யுத்த காலப்பகுதியில் இழந்த தமிழ்மக்களின் நிலங்கள் படிப்படியாக கையளிக்கப்படும் நிலையில் முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் அந்த நியாயம் செயலிழந்து கிடக்கின்றது என்பதுதான் எனது ஆதங்கம்.
தினமும் பத்திரிகைகளிலும் வெப் தளங்களிலும் ஒவ்வொருத்தராக மாறிமாறி பொய்யான அறிக்கைகளை விடுத்த வண்ணமே உள்ளார்கள். இனிமேல் இவ்வாறு யாரும் உண்மையையும் நியாயத்தையும் கேட்கவே கூடாது என்பதுபோல் அவர்களுடைய பொய்யான கூற்றுக்களைக் கொண்ட தாக்குதல் அமைந்துள்ளது. இனிமேல் ஊடகங்களில் வெளியாகின்ற இவ்வாறானோரின் செய்திகளை மக்கள் வாசிப்பதில் ஆர்வம் காட்டவும் மாட்டார்கள்.  காட்டிலே நரிக்கூட்டமொன்று தங்களது உடலில் சாயத்தைப்பூசி பயங்கரமான மிருகம்போல் தோற்றத்தை காண்பித்து ஏனைய மிருகங்களை விரட்டி வாழ்ந்த வேசம் மழை வந்ததும் கலைந்துவிடும் எனும் பயத்தில் குடைபிடிப்பது போன்ற செயலே இவர்களின் போலி அறிக்கைகள் எனவும் கருதுகிறேன்.
எனவே எனது பணிவான வேண்டுகோளென்னவென்றால்  நியாயமானதும் சட்ட ஏற்புடையதுமான முறையில் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு இழப்புகள் ஈடு செய்யப் படுவதுடன் எமது சமுக உறவுகளை வளர்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப் படவேண்டும் என்பதே எனக்கூறி இதற்காவது உங்கள் பதில் கிடைக்கும் என எதிர்பார்த்து முடிக்கின்றேன்  என்று  வைத்தியர் யூசுப்  தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . 

கருத்துரையிடுக

 
Top