எதிர்  வரும் பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ்  சார்பில் ஐக்கிய  மக்கள் சுதந்திர  கூட்டமைப்பில்   போட்டியிடும்  மூன்று வேர்ப்பாளர்களுக்கும்  ஊரார் அனைவரும்  அணி திரண்டு வாக்களிப்பது  என அக்கரைபற்றின்  அனைத்து  பள்ளிகள்,  அனைத்து  விளையாட்டு  கழகங்கள் ,வர்த்தக சங்கம் ,மர ஆலைகள்  சங்கம் , ஆட்டோ  சங்கம் ,இன்னும் பல பொது  நிறுவனங்கள் மற்றும் இன்னும் பல பொது  அமைப்புக்கள்    கூடி ஒருமித்த குரலில்  பொது பிரகடனம் ஒன்றை  இன்று  2015.07.22 ஆம் திகதி புதன் கிழமை  அக்கரைபற்று  அதாஉல்லா   அரங்கில் மாலை 4.00 மணிக்கு  நிறைவேற்றி   உள்ளது .

இதன் மூலம் அக்கரைப்பற்றில் காணப்படும்  28000 ஆயிரம்  வாக்குகளில் கிட்டத்தட்ட  25000 வாக்குகள்   தேசிய  காங்கிரசிக்கு  அளிக்கப்படும்  என எதிர்பார்க்க  படுகிறது . கடந்த 15  ஆண்டுகளாக நடை  பெற்ற  தேர்தல்களில்   அக்கரைபற்றில் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  அதன் பிரகாரம்  தேசிய காங்கிரசையும் அதன் தலைமையையும்  பலப்படுத்தி  வந்துள்ளமை  குறுப்பிட தக்கது .சுமார்  15 ஆண்டுகளாக  கட்டிகாத்த  எமது பிரதிநிதித்துவத்தை  ஒருபோதும்  இழக்க  அனுமதியோம்  என்ற  கோசமும்  இதன் போது  ஓங்கி  ஒலித்தது

கருத்துரையிடுக

 
Top