ஓட்டமாவடி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளாருமான அமீர் அலியின் பிறந்துரைச்சேனை அரசியல் செயற்பாட்டாளருமான ஏ.ஜி.தெளபீக் இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டார். தன்னையும் தன் கிராம மக்களையும் இதுவரை அமீர் அலி ஏமாற்றி வந்துள்ளமையையும் குறிப்பிட்ட நபர் அவர் தன்னை ஏமாற்றி வேலைவாய்ப்பு என்று பொய்யாகக் கூறி வழங்கி வைத்த படிவத்தையும் முதலமைச்சரிடம் காண்பித்தார்.

குறிப்பிட்ட நிகழ்வில் ஓட்டமாவடி இணைப்பாளர் லியாவுதீன் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் சமூகமளித்திருந்தனர்.

கருத்துரையிடுக

 
Top