( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கிழக்கு மாகாண இளைஞர் பாரம்பரிய கரையோர நடைப்பயணம் எனும் தொணிப்பொருளில் பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மாணவர்கள் 9 பேர் திருகோணமலை கொக்கிளாய் எனும் இடத்திலிருந்து 2015.07.15 முதல் 10 நாள் கரையோர கால் நடைப்பயணத்தை மேற்கொண்டு நேற்று முன் தினம்(21) கல்முனையின் கடற்கரையை வந்தடைந்தவர்களை கல்முனை 3வது விஜயபாகு படைப்பிரிவின் இணைப்பதிகாரி லெப்டினன் கேணல் டபில்யு.பி.பண்டித வரவேற்று தமது முகாமில் தங்குதற்கு ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

மேற்படி பயணத்தை மேற்கொண்டு கல்முனை வந்த பல்கலைக்கழக மாணவர்களை தென்கிழக்கு கல்கலைக்கழகதத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜீம் ,பதிவளர்  எச்.அப்துல் சத்தார், மல்வத்தை 24ஆம் படைப்பிரிவு   தளபதி மேஜர் ஜென்ரல் றோஸான் பண்டார மற்றும் கல்முனை 3வது விஜயபாகு படைப்பிரிவின் இணைப்பதிகாரி லெப்டினன் கேணல் டபில்யு.பி.பண்டித ஆகியோர் அம்மாணவர்களை நேற்று மாலை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இவ் நடைப்பயணத்தின் 10ஆவது நாள் கிழக்கு மாகாணத்தின் கும்புக்கண் ஓயாவுடன் முடிவடைவதாக இப்பயணத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

 
Top