(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரியில் கற்கும் மாணவிகளின் குடும்பங்களுக்கு இன்று  மாலை (06-07-2015) உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் செயலாளர் எம்.பகுறுதின் ஆசிரியரின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்வு  நடைபெற்றது. இந்த நிகழ்வில்  கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 
பறகஹதெனிய அன்ஸாரிஸ் சுன்னத்துல் முஹம்மதியாவின் அணுசரனையில் மருதமுனை தாறுல் ஹூதா பெண்கள் அறபுக் கல்லூரியில் கற்கும் முன்னூறு மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா ரூபா 1500 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மௌலவிகளான ஏ.எல்.ஏ.எஸ்.முபாறக், ஆர்.முயீஸ் மற்றும் எம்.ஏ.எம்.மர்சூக் ஆகியோருடன் கல்லூரி நிர்வாகிகளும்  கலந்து கொணடனர்.கருத்துரையிடுக

 
Top