ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  மாவடிப் பள்ளி மத்திய குழு  உறுப்பினர்கள்  அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளனர் . இந்த இணைவு  சற்று நேரத்துக்கு முன்னர்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிப் தலைமையில்  அவரது சாய்ந்தமருது  செயலகத்தில் இடம் பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  மாவடிப் பள்ளி மத்திய குழு உப தலைவர், செயலாளர் உட்பட  உறுப்பினர்கள் பலர்  இணைந்து கொண்டு எதிர் வரும் பொது தேர்தலில்  முழுமையான ஆதரவு வழங்குவதாக  உறுதியளித்துள்ளனர் . 

Post a Comment

 
Top