யு.எம்.இஸ்ஹாக் 

கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி புதிய மாணவர்களை  இணைத்துக் கொள்வதற்கான எழுத்துப் பரீட்சையும்  நேர்முகப் பரீட்சையும்  எதிர்வரும்  02.08.2015  ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு நடை பெறும்  என கல்லூரி அதிபர்  மௌலவி யு.எல்.அப்துல் கபூர் தெரிவித்துள்ளார் . 

ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பிய மாணவர்களும் , புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும்  அன்றைய தினம் நடை பெறும்  பரீட்சைகளில் கலந்து கொள்ள முடியும் எனவும்  அதிபர்  மேலும் தெரிவித்துள்ளார் .
 மாணவர்களின் தெரிவு இரு பிரிவுகளாக  நடை பெறும் 01.  கிதாப்  ஷரீஆப்  பிரிவு இதற்கான தகமைகளாக  அரசாங்கப் பாடசாலையில் 8 ஆம் ஆண்டு கல்வி கற்றிருப்பதுடன் 15 வயதுக்குட்பட்டவராக  இருத்தல் வேண்டும் ,பாடசாலை  முன்னேற்ற அறிக்கை திருப்தியாகவும்  குர் ஆன் தஜ்வீத் முறைப்படி ஓதக் கூடியவராகவும்  கல்லூரியால் நடாத்தப் படும் எழுத்து ,நேர்முகப் பரீட்சைகளிலும்  சிதியடதல்  வேண்டும் . 02. ஹிப்ளுள் குர் ஆன் ( குர் ஆன் மனனப் பிரிவு )  இதற்கான தகைமைகளாக  பாடசாலைக் கல்வியில் 06 ஆந் தரம் சிதியடைந்திருப்பதுடன்  12 வயதுக்குட்பட்டவராகவும்  இருப்பதுடன் ,குர் ஆன் தஜ்வீத் முறைப்படி ஓதக் கூடியவராகவும்  இருத்தல்  வேண்டும் .

இக்கல்லூரியில் க .பொ .த  சாதாரண மற்றும்  உயர்தர பரீட்சைகளுக்கும்  அல் -ஆலிம் ,அஹதியா .தர்மாச்சாரியார் , கணணி  போன்ற அரசாங்கப் பரீட்ச்சைகளுக்கும்  மாணவர்கள் தயார் படுத்தப் படுவார்கள் எனவும் அதிபர்   மௌலவி யு.எல்.அப்துல் கபூர்  தெரிவித்துள்ளார் .

கருத்துரையிடுக

 
Top