கிழக்கு மாகாணத்தில் இரண்டு வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார். சாதனைக்கு தயாராகும் 

கிழக்கு மாகாணசபையின் மிகுதியாக உள்ள 2 வருட ஆட்சியில் கிழக்கிலுள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையிலும் ஒவ்வொரு சபையின் எல்லைக்குள்ளும் இரண்டாயிரம் (2000) பேர் வீதம் 45 சபைகளுக்கும் 90000 ஆட்களை நியமிக்கவும், அதற்கான ஆளணிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்யவும் சபைகளின் செயலாளர்களுக்கு  முதலமைச்சரினால்  பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பிலும் ஒவ்வொரு (காமன்பெக்டரிகளை) ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் 650 வேலையாட்களை நியமிக்கும் பணிகளுக்காக முதலீட்டாளர்களுடனும், தொழிற்சாலைச் சங்கத்தினருடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளதால் அவசரமாக அதற்கான வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளன.

கிழக்கிலிருந்து ஒவ்வொரு வருடமும் 15000 பதினையாயிரம் பணிப்பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களை அங்கு செல்வதை நிறுத்தும் வகையில் இத்தொழில் வாய்ப்பின் மூலம் முற்றாக பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை நிறுத்திவிடலாம், வறுமை நிலையினை முடிவுக்குக் கொண்டுவந்து வாழ்வாதாரத்தைக் கூட்டலாம் என்ற நல்ல நோக்கோடு அத்தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்துள்ளார்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படவுள்ள இத்தொழில் வாய்ப்புக்கள் மூலம் கிழக்கில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படுவதுடன் சுபீட்சமான வாழ்வியலுக்குள் மக்கள் திரும்பி விடுவர் என்ற நல்லெண்ணம் முழுமையாக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்துக்கு கிழக்கில் உள்ள அனைவரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கூட்டாட்சியாக இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவி பொறுப்பேற்று வெறும் 5மாத காலத்தில் கிழக்கு மாகாணத்தில் நிரந்தர நியமனம்; 1500 பேருக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதுடன்  தற்காலிக நியமனம்.. 500 பேருக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் 1000 பேருக்கு மேல் வேலைவாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top