(அகமட் எஸ். முகைடீன்)

சமூகத்திற்கான காத்திரமான முன்னெடுப்புக்களை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இறக்காமம் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டார்.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வராக சிராஸ் மீராசாஹிப் மக்கள் பணியாற்றியபோது அவரிடம் காணப்பட்ட ஆற்றல், சேவை நலம், விவேகம், வேகம் என்பவற்றை அறிந்தவர்களாக இருந்த பிரதேச வாசிகள் இதன்போது மாலை அணிவித்து, கைலாகு செய்து அமோக வரவேற்பு வழங்கினார்கள். எதிர்வரும் பாராளுமன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிநிதித்தும் நிச்சயிக்கப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஏமாற்றும் தலைமைகளை நம்பி ஏமாறிய காலம் மலையேறிவிட்டதாகவும் சமூக உணர்வு மிக்க தலைமையான றிசாத் பதியுதீன் அவர்களின் கரத்தைப் பலப்படுத்துவதன் மூலம் மாற்றத்தை வேண்டி நிற்கும் தறுணம் இதுவென்றும் கூறினர்.

இப்பிரச்சார நடவடிக்கையில் குறித்த கட்சியின் வேட்பாளர்களான சுலைமா லெப்பை மற்றும் சித்தீக் நதீர் ஆகியோரும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.கருத்துரையிடுக

 
Top