சமூகத்தின் சூபீட்சத்திற்கான விடியலை நோக்கியிருக்கும் தறுணத்தில் புலர்ந்திருக்கும் புனித நோன்புப் பெருநாள் இலங்கைப் பிரஜைகள் மத்தியில் இன நல்லுறவை ஏற்படுத்தி நல்லாட்சி நீடிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தனது நோன்புப் பெருநாள் தின செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நோன்பு காலமனது தூய இஸ்லாமியனாக வாழ்வதற்கான பயிற்சிப் பாசறையாக அமைந்திருந்தது. அக்காலத்தில் நாம் கடைப்பிடித்த நற்குணங்களும் நல்லமல்களும் நாள்தோறும் நீடிப்பதற்கும் பசித்திருந்து தாகித்திருந்ததன் நோக்கத்தை அடைவதற்கும்  இறைவன் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அருல் புரிய வேண்டும்.

சமூக உணர்வுள்ளவர்களாக திகழ்ந்து நாட்டின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்காற்றுவதோடு இன ஐக்கியத்தையும், சமூக நல்லுறவையும் பேணி  நடப்பதற்கு இந்நன்நாளில் உறுதிபூனுவோமாக. அத்தோடு உறவுகளை உயிர்ப்பித்து இறைவனின் விருப்புக்குரியவர்களாக எம்மை நாம் மாற்றிக்கொள்வோமாக.   

இப்புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக திகழ நல்லருல் புரிய இருகரமேந்தி எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

கருத்துரையிடுக

 
Top