கல்முனை பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் 2015ஆம் ஆண்டுக்கான  திரியபியச  வீடமைப்பு திட்ட  ஆரம்ப நிகழ்வு  (09) கல்முனை 03ஆம் பிரிவில் இடம்பெற்றது.

திவிநெகுமஅபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன்  மேற் கொள்ளப்படும் இவ்வீட்டுத்திட்டத்துக்கு   திவிநெகும சமுக அ பிவிருத்தி  பிரிவினூடக தலா எழுபத்தையாயிரம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பிரதேச சமுக அபிவிருத்தி பிரிவினால் மேலதிக  நிதிகளும் ஒதுக்கப்பட உள்ளன.  

கல்முனை  திவிநெகும வலய உதவி முகாமையாளர்  எஸ் .எல். அஸீஸின்  ஒருங்கிணைப்பில்  இடம்பெற்ற இவ் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எச்.முகமட்கனி, பிரதேச திவிநெகும அதிகாரி  எ.ஆர். எம். ஷாலிஹ், திவிநெகும  சமுக அ பிவிருத்தி உத்தியோகத்தர்  என்.எம். நௌசாத், திவிநெகும  அ பிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.எம்.எ.மஜீட்   உட்பட   திவிநெகும அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top