அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட்  பதியுதீன்  சனி ஞாயிறு  இரு தினங்களும் அம்பாறை மாவட்டத்தில் இடம் பெறவுள்ள  தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில்  கலந்து கொள்ளவுள்ளார் . இந்த இரு தினங்களிலும்  பொத்துவில்  தொடக்கம் மருதமுனை வரை  தேர்தல் பிரச்சார சந்திப்புக்கள்   இடம் பெறவுள்ளது .

இதே நேரம்  மாற்றுக் கட்சிகளை  சேர்ந்த பல அரசியல் முக்கியஸ்தர்கள் பலர்  அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து  கொள்ளும் நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளது.

சம்மாந்துறையில்  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்  நௌசாத் ,கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்  அமீர் ,முன்னாள் ஜனாதிபதி இணைப்பாளர்  காதர்  ஆகியோரும்  மருதமுனையில்  கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான  ரகுமான் ,அமீர்  ஆகியோரும் கல்முனையில் மாநகர சபை உறுப்பினர்  றியாஸ்  ஆகியோரும்  இணைந்து கொள்ளவுள்ளதாக  கல்முனை நியூஸ் இணையதளத்துக்கு  நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top