கணவன் : நோன்பு  20வதும்  பெய்த்து நீ எப்பதான் உடுப்பெடுக்கப்போறாய் ???
மனைவி : இன்னும் புது டிசைன்    ஒன்டும் வரல்லயாம் பிறகு பாப்பம்
 
கணவன் :  இல்ல புள்ள..... புது புது  டிசைன் எல்லாம் வந்து கிடக்காம் நம்மட மெளலவிட கடைல          
                                                          
மனைவி : சரி, புது டிசைன் என்டாத்தான் எடுக்குற, சரியா!
கணவன் : சரி வாவன்தாங் போய் பாப்பம்
கடையில் .......
                                                   
கணவன் :  பெருநாளைக்கு புதுசா     ஏதும் அபாயா டிசைன்    வந்திருக்கா மெளலவி!
    கடை வியாபாரி(மெளலவி)  : ஒ ! இந்தா கிடக்கு நேத்துராவுதான் டுபாய் ல இருந்து  வந்த  புது டிசைன் அபாயா பண்டல்.   
மெளலவி : இப்பதான் உடச்ச உங்களுக்குதான் முதல் முதலா காட்டுரன்
கணவன் : பார்த்து எடு புள்ள எல்லாம் புது டிசைனாம்
மனைவி : எனக்கென்டா இதுல ஒன்டுமே பிடிக்கல                      
  உடம்பு ,கை எல்லாம் தள தள வென்டு பெரிச கிடக்கு
                                                  
மனைவி : உங்கட உம்மாக்கு வேனுமென்டா இதுல  எடுத்து குடுங்க அவைக்கு தான் சரி இது
(கணவனும் மெளலவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.......)
மெளலவி : இல்ல புள்ள!  இந்த முறை வந்து இருக்குற Fashion & Tite மொடல்  இதுதான்
மனைவி: ம். ஹ்ம் .. நான் செல்லிட்டன்  இதுக்குதான் நான் சென்ன பஜ்ஜிரியாட தைப்பமென்டு    
                              
மனைவி : அவள்ற வீட்ட போவம் அவள் நல்ல துணியும் வெச்சிரிப்பாள் அவள்ட தச்சி பேட்டாதான் அபாயா போட்டா போல இருக்கும்   
                   
மனைவி : அவள்தான் சொக்ஸ் கையும் வெச்சி, ஒட்டினாப்போல உடம்பும் வெச்சி அந்தமாதிரி தைப்பாள்                                         
கணவன் : இவ்வளவு புதுசுலயும் உனக்கு ஒன்டும் பிடிக்கல்லாட்டி
இதுக்கு பிறகு உனக்கு பின்னால அலைய எனக்கு நேரம் இல்ல...
மனைவி : அப்ப .., இப்படி ஒரு அபாயா போட்டு நான் இந்த பெருநாள் கொன்டாடமாட்டன்
                
சைக்கிள எடுங்க வீட்ட போக
கணவன் :(வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் ட்ர்ா்ா்ா்)      
காத்தான்குடி (LM.றிபாத்) 
  

கருத்துரையிடுக

 
Top