ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கண்டி மாவட்டத்தில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் இன்று மாலை 6:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் லெஹான் ரத்வத்தையின் ஆதரவாளர்கள் மேற்கொண்டதாக அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை அமைச்சர் ஹக்கீமிற்கும் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் குறித்த குழுவினர் கொலை அச்சுறுத்தல்களையும் விடுத்ததாக ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

 
Top