(பி.எம்.எம்.ஏ.காதர் யு.எம்.இஸ்ஹாக் எஸ்.எல்.ஏ.அஸீஸ் எஸ்.எம்.ரம்ஸான் )
கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் விஷேட மார்க்கச் சொற்பொழிவும் இன்று (09-072015)கல்முனை திரு இருதைய நாதர் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மூவின சமூகங்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை  பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.ஏ.அலி அக்பர் விஷேட மார்க்கச் சொற்பொழிவாற்றினார். அம்பாறை மாவட்டச் செயலாளர் திரு துசித்த பி.வனிகசிங்க பிரதம அதிதியாக் கலந்து கொண்டார். 
விஷேட அதிதிகளாக அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் அஷ்செய்க் எம்.ஐ.அமீர் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யூ அப்துல் ஹப்பார்  அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிதிகளாக பிரதேச செயலாளர்கள் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  ஊடவியலார்கள் உள்ளிட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  

கருத்துரையிடுக

 
Top