(யு.எம்.இஸ்ஹாக் )

கல்முனைக் குடி -01 கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களையும் ,பதவி உயர்வு பெற்றவர்களையும் , அல் -ஹாபீழ்  பட்டம் பெற்றவரையும்  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்  ,இப்தார்  நிகழ்வும்  நேற்று  கல்முனை ஆஸாத் பிளாசா  மண்டபத்தில் நடை பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனையின்  எல்லைக் காவலனுமான  எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார் .
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட்  கனி  கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டு  ஓய்வு பெற்ற அரச ஊழியர்களையும் ,பதவி உயர்வு பெற்றவர்களையும் , அல் -ஹாபீழ்  பட்டம் பெற்றவரையும்  பாராட்டி கௌரவித்தனர் .
கல்முனை  மண்ணை காத்தவர் என்ற பெருமைக்காக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் அங்கு கௌரவிக்கப் பட்டார் 

கருத்துரையிடுக

 
Top