கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் சுகாரதார தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி பிராந்திய சுகாதார பணிமனைக்கு முன்பாக இன்று பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்தனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்  காலை 10.00 தொடக்கம் 12.30 வரை இடம் பெற்றது. பத்து வருடங்களுக்கும் மேலாக நாங்கள் தொண்டராக சம்பளம் இன்றி பணியாற்றிவரும் வேளை 300 பேருக்கு நிரந்தர நியமனம் சுகாதார அமைச்சினால் வழங்கப் பட்டுள்ளது. கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் 35 பேர் தொண்டர்களாக பணிபுரிகின்றோம்  அதில் ஒருவருக்கேனும்  இந்த நியமனத்தில் வழங்கப் படவில்லை. 
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் தொண்டராக எவரும் பணியாற்றவில்லை என்று கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் கிழக்கு மாகாண ஆளுனருக்கு கடிதம் எழுதியிருப்பதாக  ஆளுனர் அலுவலகத்தால் இவர்களுக்கு கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இதனை எதிர்த்தே 35 சுகாதார தொண்டர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஏ.அலாவூதீனை தொடர்பு கொண்டு கேட்டபோது சுகாதார தொண்டர்கள் சேவை புரிகின்றனர் என்றே ஆளுனருக்கு கடிதம் எழுதியுள்ளேன். என்றார்  இவ்விடயம் தொடர்பாக மேலதிக கருத்து தன்னால் தெரிவிக்க முடியாது சுகாதார அமைச்சின் செயலாளரது அனுமதி பெற்ற பின்பே என்னால் மேலதிக தகவல்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top