எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவென வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். 

நாளைய தினம் குருநாகல் மாவட்டத்திற்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பு மனு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.

கருத்துரையிடுக

 
Top