விண்ணப்பதாரர்களின் வசதி கருதி கல்வி பொதுத் தராதர உயர்தர விண்ணப்பங்களில் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்காக 3 விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
 
அதற்கமைய விண்ணப்பங்களில் தேசிய அடையாள அட்டை இலக்கம், எப்பிரிவில் தோற்றவுள்ளனர் மற்றும் பரீட்சை இலக்கம் என்பன உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை 13ஆம் திகதி வரை நடைபெறும் எனவும்  மீண்டும் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 8ஆம் திகதி நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்காக சுமார்  309,069 மாணர்வகள் விண்ணப்பத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top