புனித ஷவ்வல் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று (17) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில்  நடைபெறவுள்ள இம்மாநாட்டில்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், மேமன் சங்கம்,  தரீக்காக்கள் சாவியாக்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
நாட்டின் எப்பாகத்திலாவது தலைப்பிறையை கண்டவர்கள் ஆதாரங்களுடன் 0112 432110, 011 25234044 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது 0112390783 என்ற தொலைநகல் இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு அறியத்தருமாறு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top