எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் இன்று இணைந்துகொண்டார்.அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக அரசியலில் பிரவேசித்த இவர், கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.
இந்த நிலையில் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தார்.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு  அக்கட்சியினால் வேட்புமனு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் இன்று இணைந்துகொண்டார்.
இதனையடுத்து அவர் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு பத்திரத்திலும் கையொழுத்திட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது  

கருத்துரையிடுக

 
Top