முரு­கேசு இரா­ஜேஸ்­வரன் 
அம்­பாறை மாவட்ட தமிழ் மக்­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும். இதனை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் மூல­மா­கவே நாம் உறு­திப் படுத்திக் கொள்ள முடியும். இதற்­காக இம்மாவட்­டத்தின் பட்டி தொட்­டி­யெங்கும் சென்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வெற்­றிக்­காக உழைப்பேன். இதனை விடுத்து இந்தக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்கும் எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் ஆத­ர­வாக தனித்து பிர­சார நட­வ­டிக்­கையில் வெளிப்­ப­டை­யா­கவும்  மறைமுகமா­கவும் ஈடு­ப­ட­மாட்டேன்
இவ்­வாறு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் முரு­கேசு இரா­ஜேஸ்­வரன் குறிப்­பிட்டார்.
எதிர்­வரும் பாரா­ளு­மன்ற பொதுத்­தேர்­தலின் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பின் வெற்­றியை அம்­பாறை மாவட்­டத்தில் உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஆராயும் முக்­கிய கலந்­து­ரை­யாடல் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் முரு­கேசு இரா­ஜேஸ்­வ­ரனின் இல்­லத்தில் இடம்­பெற்ற வேளையில் அவர் ஆத­ர­வா­ளர்கள் மத்தியில் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் மேலும் பேசு­கையில், தமிழ் மக்­களைப் பொறுத்தமட்டில் இத்­தேர்­த­லா­னது அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்த தேர்­த­லாகும். காரணம் எமது 65 வருட கால போராட்டத்­திற்­கான அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்கு சாத­க­மான சூழல் கனிந்­துள்ள நிலை­யிலும் போர்க்­குற்ற விசா­ரணை எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­ம­ளவில் ஜெனிவாவில் இடம்­பெ­ற­வுள்ள சூழ­லிலும் நாம் சந்­திக்கும் தேர்தல் இது­வாகும்.
தமிழ் மக்­க­ளா­கிய நாம் இத்­தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிக்­கப்­போ­கின்றோம் என்­ப­தை­யிட்டு அலசி ஆராய வேண்டும். இது கால வரையும் நாம் இழந்த இழப்­புக்கள் சந்தித்த வேத­னைகள், சோத­னைகள் இவற்றில் இருந்து விடு­பட்டு எமது எதிர்­கால சந்­த­தியின் எந்­த­வி­த­மான இடர்­பா­டு­களும் இன்றி அச்­ச­மற்ற சூழலில் கௌர­வ­மாக வாழும் சூழலை தோற்­று­விக்க வேண்­டு­மாயின் தமி­ழர்­களின் ஒன்­று­பட்ட சக்­தி­யா­கவும் தனித்­து­வ­மான அர­சியல் பேரி­யக்­க­மா­கவும் உள்ள சர்­வ­தேச சமூ­கத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிப்­பது தலை­யாய கட­மை­யாகும்.
உர­லுக்கு ஒரு பக்கம் அடி­விழும் ஆனால் தவி­லுக்கு இரண்டு பக்­கமும் அடி­விழும். அதே தவிலின் நிலையில் எமது அம்­பாறை மாவட்ட தமி­ழர்­களின் நிலை உள்­ளதை நாம் ஒரு கணம் எண்­ணிப்­பார்க்க வேண்டும்.
பெரி­ய­நீ­லா­வணை தொடக்கம் பாணமை வரை­யுள்ள பிர­தே­சங்­களில் வாழும் தமிழ் உணர்­வா­ளர்­களை திசை திருப்பி அவர்­க­ளுக்கு அற்ப சொற்ப சலு­கை­களை காண்பித்தும் வழங்­கியும் ஆசை வார்த்­தை­களை அள்­ளிச்­சொ­ரிந்தும் வாக்கு வேட்­டை­யாட பேரி­ன­வாதக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் உதி­ரிக்­கட்­சி­களின் வேட்­பாளர்­களும் எமது தமிழ் கிரா­மங்­க­ளுக்குப் படை­யெ­டுக்கும் படலம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.
இவர்கள் எந்தப் பொந்திலிருந்து எதற்­காக வரு­கின்­றனர் என்ற உண்­மையை தெளி­வாகப் புரிந்துகொள்­ள­ வேண்டும்.
நாம் தமிழர், தன்­மானம் மிக்க பரம்­ப­ரை­யினர் என்­பதை உறு­திப்­ப­டுத்தி எமது இறுதி இலக்கை அடைய தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் பின்னால் அணிதிரள்வதே எமது எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் நன்மையாகும்.
எனவே, நான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்காக அதீதமாக உழைப்பேனே தவிர தனிப்பட்ட வகையில் எந்தவொரு வேட்பாளர்களினதும் விருப்பு வாக்கை அதிகரிக்க உழைக்க மாட்டேன் என்பதை என்மீது பற்றுக்கொண்ட எமது தமிழ் உறவுகளுக்கு வெளிப்படுத்துகிறேன் என்றார்.  

கருத்துரையிடுக

 
Top