நற்பிட்டிமுனை ஜும்மா  பள்ளி வாசல் நிருவாகிகள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு  ஜும்மா  பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஏ.எல்.நசீர் கனி தலைமையில் இடம் பெற்றுள்ளது. இதில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .கப்பார் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

  கல்முனை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .கப்பார் விசேட சொற்பொழிவாற்றினார் . நட்பிட்டிமுனையில் இடம் பெறுகின்ற குற்றச்செயல்கள் , குறைபாடுகள் தொடர்பாக  அங்கு அவரால்  உரையாற்றப் பட்டது.  தலைக் கவசம் அணியாமல் மோட்டார் சைக்கள்  ஓட்டுவது, முறையற்ற ஒலி  பெருக்கிப் பாவனை, கிராமத்தில் நிறைந்துள்ள மதுப் பழக்கம் , நள்ளிரவில் வீதிகளில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் , பள்ளிவாசல்களில் அதான் சொல்லும்  முறைகள் தொடர்பாக  விரிவாக பேசப்பட்டது. 
இந்த நிகழ்வில் கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் 40 பேர் கலந்து கொண்டனர் 

கருத்துரையிடுக

 
Top