(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை எபிக் அமைப்பின் வருடந்த இப்தார் நிகழ்வு  எபிக் வளாகத்தில் இடம் பெற்றது.

அமைப்பின் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  எபிக் கல்வியகத்தின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனையில் மாணவர்களின் நலன் கருதி இலவச கல்விச் சேவையை வழங்கி வரும் எபிக் அமைப்பில் கல்வி கற்றுக் கொடுத்து மரணித்த எச்.எல்.எம்.தன்சில் மற்றும் ஏ.எம்.சாதிக் ஆசிரியர்களின்  நினைவாக வருடாந்தம் இப்தார் நிகழ்வை நடாத்தி  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

 
Top