HQI கப்பார்
 கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களில்  இந்து பக்தர்கள் அவமதிக்கப் படுவதாக வெளியான  செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை  என  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள் யு .ஏ.கப்பார் தெரிவித்தார் .

குறிப்பாக  கல்முனை பிரதேசமூடாக  நாளாந்தம்  பல பக்தர்கள்  மட்டக்களப்பு,திருகோணமலை  மற்றும்  வடக்கு மாகாணங்களில் இருந்து  கதிகாமம் நோக்கி செல்கின்றனர் . அவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு கல்முனை பிரதேசத்தில் எவ்வித இடையூறும் இடம் பெறவில்லை .

இனங்களிடையே  நல்லிணக்கத்தை  ஏற்படுத்தவேண்டிய சில ஊடகங்கள்  உண்மைக்குப் புறம்பாக  ஆதாரமற்ற குற்றங்களை  வெளியிட்டு இன விரிசலை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது,   எனினும்  கதிகாமம் நோக்கி பயணிக்கும் பக்தர்களுக்கு  கல்முனை பொலிசார்  எவ்வித இடையூறும்  இடம் பெறாமல்  அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க  ஆயத்தமாக உள்ளனர் என கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  ஏ.டபிள் யு .ஏ.கப்பார் தெரிவித்தார் .

Post a Comment

 
Top