( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)

தேசிய ரீதியில் கணணி உருவாக்கல் போட்டியில் சாதனைபடைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் ஹஸீப் முஹம்மட்டின் சாதனை கல்முனைப்பிரதேசத்திற்கு  மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்துள்ளது.
இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ளவாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , 
இலங்கை முஸ்லீம்களின் தேசிய கல்விச் சொத்து எனஎல்லோராலும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பேசப்படும்கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள்தொடர்ச்சியாக கல்வி , விளையாட்டு மற்றும் புறக்கிருத்தியசெயற்பாடுகளில் சாதனைகளை ஏற்படுத்தி வருவதுஇக்கல்லூரியின் பழைய மாணவன் என்ற ரீதியில் எனக்கு மிகவும்பெருமையளிக்கின்றதுஇவ்வாறான இக்கல்லூரி பாசறையில்வளர்ந்த  எனக்கு அரசியலில் பிரகாசிக்க களம் அமைத்தவரலாற்றை என்னால் மறக்க முடியாதுள்ளதுஇதற்காக  தியாகமனப்பாங்குடன் கடமையாற்றும் ஆசிரியர்களை பாராட்டாமல்இருக்க முடியாது.
பாடசாலை என்பது தனியே கல்வியில் மட்டும் தனதுசெயற்பாட்டை முன்னெடுத்துச் செல்ல கூடாதுபல்துறையிலும்மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும்அந்த அடிப்படையில்கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மிகவும் சிறப்பாகமாணவர்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகின்றது.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகவும் சுறுசுறுப்பாக இரவும்பகலும் பாடுபட்டுழைக்கும் இக்கல்லூரியின் அதிபர்பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள்பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள் ,உத்தியோஸ்தர்கள் , பெற்றோர் , நலன் விரும்பிகள் , பழையமாணவர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்மற்றும் அரசியல் பிரமுகர்களின் பங்களிப்பு இக்கல்லூரிக்குமுழுமையாக கிடைப்பதனால் இக்கல்லூரி இன்றுபலதுறைகளிலும் வளர்சியடைந்துள்ளது.
அண்மையில் ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கொழும்புபல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய ரீதியில் மாலபேகெம்பஸில் ஒழுங்கு செய்திருந்த  தகவல் தொழில்நுட்பபோட்டியில் மூன்று சாதனைகளை ஏற்படுத்தியிருந்தமை , தேசியரீதியில்  கிறிக்கட் துறையில் சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டிருந்தமை , கிழக்கு மாகாண ரீதியில் 5 தடவைகள்தொடர்ச்சியாக சதுரங்க போட்டியில் சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்டு சாதனை ஏற்படுத்தியமை இங்கு நினைவுபடுத்தக்கூடியனவாக உளள்ளது.
எனவே கல்லூரி மாணவர்களின் முயற்சிக்கும் வெற்றிக்கும்காரணகர்த்தாக்களாக விளங்கும் அனைவருக்கும் தனதுவாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

 
Top