பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் நாளை (06) ஆம் திகதி முதல் ஆரம்பமாகின்றது. இதேவேளை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட செயலகங்களுக்கு இன்று (05) முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் வேட்பு மனுக்கள் நாளை 06 ஆம் திகதி காலை 08.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிவரை மாவட்ட செயலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

இறுதித் தினமான 13 ஆம் திகதி பகல் 12.00 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது நிறைவடையும். அதனைத்தொடர்ந்து பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை ஆட்சேபனை தெரிவிக்க முடியுமென்றும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

 
Top