கல்முனை மாநகர சபையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார ராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசன் அலி, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன்,மாநகர சபை உறுப்பினர்கள்  உட்பட அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மௌலவி அப்துல் நாசர் ரமழான் மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.கருத்துரையிடுக

 
Top