முகம்மட் மக்பூல்

மகிந்த – மைத்திரி புதிய அரசியல் கூட்டணி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த்pயிருக்கும் இன்றைய சூழ்நிலையல் மகிந்த அணி சார்பாக முன்னாள் எம்பி ஹூனைஸ் களமிறங்கவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

வன்னி மாவட்டத்தில் மகிந்த அணி சார்பாக போட்டியிட முன்னாள் எம்பி ஹூனைஸூக்கு இரண்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது. அதன்படி இரண்டாவது நபராக ஹூனைஸின் வேண்டுகோளை ஏற்று வவுனியாவை சேர்ந்த மஸ்தான் என்பவர் போட்டியிடவுள்ளார்.

ஐதேக, மைத்திரி அணி , மகிந்த அணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு என ஆசன ஒதுக்கீடு கேட்டு  அக்கட்சிகளின் காரியாலங்களை ஏறி இறங்கிய ஹூனைஸ் எம்பிக்கு தற்போது இறுதியாக மகி;ந்த அணி கைகொடுத்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த கடைசி இரு வருடங்களில் முஸ்லிம் சமுகம் பாரிய அசௌகரியங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டது.

முஸ்லிம்களி;ன் ஹலால் ஹபாயாவில் கைவைத்த மகிந்த அரசு, நாடுபூராகவும் ஐம்பதிற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருந்தது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஹூனைஸ் எம்பி முஸ்லிம் சமுகத்தை முன்னிலைப்பபடுத்தி மகிந்த அரசை விட்டு வெளியேறி ஐதேகவில் இணைந்து கொண்டதாக அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

அவ்வாறு அன்று   மகிந்த அரசின் மீது குற்றம் சுமத்திய ஹூனைஸ், தற்போது மகிந்த தரப்புடன் இன்று அவர் வன்னியில் போட்டியிட ஆசனம் பெற முயற்சித்திருப்பது வன்னி மாவட்ட முஸ்லிம்களை மட்டுமன்றி நாடுபூராகவுமுள்ள முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் விமர்சனத்தையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.

மகிந்த அரசு வீழ்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தவர்கள் ரிசாதும் ஒருவர் என்று குற்றம் சுமத்தும்  மகிந்த தரப்பு எப்படியாவது ரிசாதை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் ஹூனைஸூக்கு ஆசனம் வழங்க கடந்த ஓர் இரு நாட்களுக்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்தது. அ;ந்த ரீதியில் இன்று அந்த இணக்கப்பாடு உறுதியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

வன்னி மாவட்ட ஐதேக அமைப்பாளரான ஹூனைஸூக்கு அவரது கட்சி, வன்னியில் ஹூனைஸூக்கு செல்வாக்கு இல்லை என்ற காரணத்தை முன்வைத்து இவருக்கு ஆசனம் வழங்க மறுத்திருந்தது. இதே நிலைப்பாட்டில்தான் மைத்திரி தரப்பும் இருந்த போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள மைத்திரி மகிந்த கூட்டணி சார்பில் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை சங்கடத்திற்குள்ளாக்கவும்  அம்மக்கள் சார்பான முஸ்லிம் பிரதிநித்துவத்தை இல்லாதொழிக்கும் நோக்குட னுமே தற்போது மகிந்த தரப்பு ஹூனைஸூக்கு இரண்டு ஆசனங்களை ஒதுக்கீடு செய்திருப்பது முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பெரும் உணர்வலையை தோற்றுவித்துள்ளது.

வன்னிpயில் ரிசாதை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கிலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் வில்பத்து என்னும் போலிப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சக்தி மிக்க ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே முண்டியடித்துவரும்  சூழ்நிலையில் தான் மகிந்த தரப்பும் ஹூனைஸூக்கு இந்த ஆசன ஒதுக்கீட்டை வழங்க முன்வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது 

கருத்துரையிடுக

 
Top