இக்பால் ரஷீன்- நிந்தவூர் 

நிந்தவூரில் இருந்து இன்று பாராளுமன்ற ஆசனத்தைச் சூடாக்கி ஊரை மறந்திருந்த இருவர் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று மக்கள் முன் வருவார்களேயானால் அவர்களிடம் ஒரு சிறிய சவாலை நிந்தவூர் மக்கள் விடுகின்றனர். இவ்விருவரும் இணைந்து நிந்தவூர் பிரதேச சபையைக் கைப்பற்றுவார்களா..? அதற்காக மக்கள் ஆணை  வழங்குவார்களா தைரியம் இருந்தால் இதனை செய்து காட்டட்டும்.
நிந்தவூர் பிரதேச மக்கள் மிகவும் மனவேதனையில் இருந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மீண்டும் அவர்களையே பாராளுமன்ற வேட்பாளராக களமிறக்கினால் நிந்தவூர் மக்களின் வாக்குகள் வேறொரு வேட்பாளருக்கு சென்று விடும் என்ற கசப்பான உண்மையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் உயர்பீடமும் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்..
தேசியப்பட்டியல் என்று தொடர்ச்சியாக பலனை அனுபவிக்க கட்சிக்கொரு செயலாளர் தேவையா..? தங்கள் ஊருக்கு எதுவும் இல்லை என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பல ஊர்கள் இருக்கும் போது நிந்தவூருக்கு 2 எம்பிக்கள் என்ற பெயரில் ஆசனம் மாத்திரம் சூடாக்கப்பட்டதே தவிர நிந்தவூர் மக்களுக்கு எந்தவித இலாபமும் இடம்பெற்றதாக வரலாறும் இல்லை.

நிந்தவூரில் இருக்கும் ஒரு வீதியேனும் செப்பனிடப்பட்டுள்ளதா என்றால் பூச்சியம் என்ற பதில் குழந்தையும் கூறும், தன்னைச்சுற்றியுள்ளவர்களையும் தனக்கு தரகர் வேலை பார்ப்போரையும் தூக்கிவைத்துக்கொண்டு இருக்கும் இவர்களால் நிந்தவூர் மக்களுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்துக்கோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கோ இலாபம் ஏதும் இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் டபல் பூச்சியமாகவே இருக்கிறது.

ஆகவே இப்படியான சந்தர்ப்பத்தில் திகாமடுள்ள மாவட்டத்துக்கு பூச்சியங்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்ப கட்சியின் தலைவர் முன்வருவாராக இருந்தால் மக்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு எடுத்த மாற்று முடிவினை இதிலும் எடுக்க நேரிடும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

எனவே புதிய முகங்களை மக்களின் ஆதரவுடனானவர்களை களத்தில் இறக்கி பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராக நியமிக்குமாறு கட்சியின் தலைவருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் பலம் மக்களுக்குரியது தனிநபருக்குரியதல்ல என்பதனை கடந்த கால எம்பிக்கள் புரிந்து கொள்ளட்டும்.

உதாரணம் கடந்த பிரதேச சபை தேர்தலின்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்த்து அவர்கள் தங்களுக்கு ஆளுக்கொருவரை நியமித்து வெற்றிபெறலாம் என்று நினைத்து தோல்வியுற்று ஒரு சாதாரண தாஹீர் என்பவர் சபையின் தவிசாளரானார் என்றால் எம்பீக்கள் எங்கே அவர்களுக்கு ஊரில் இருக்கும் செல்வாக்கு எங்கே எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். எனவே சிந்தித்து செயல்படவேண்டும் என்று தயவாய் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துரையிடுக

 
Top