அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு  அம்பாறை மாவட்டத்தில்  இரண்டு ஆசனங்கள்  உறுதியாகி விட்டது   என  கல்முனை மாநகர சபை உறுப்பினரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி  அமைப்பாளருமான  சி.எம். முபீத்  இன்று நட்பிட்டிமுனையில் இடம் பெற்ற  பிரசார கூட்டத்தில் தெரிவித்தார் .
நற்பிட்டிமுனை மக்கள்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து சளைத்துவிட்டனர் . வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றங்களே கிடைத்தன .  கல்முனை தொகுதியில்  அகில இலங்கை மக்கள் காங்கிரசை  வளர்த்தெடுக்க பாடுபட்டவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாக  நற்பிட்டிமுனை மக்கள் காணப் படுகின்றனர் என்றும் குறிப்பாக எமது தாய்மாரின் அர்ப்பணிப்பு அதில் அதிகம் எனவும் குறிப்பிட்ட அவர் . எதிர்வரும் தேர்தலை நற்பிட்டிமுனை மக்கள் ஆவலுடன் ஏதிர்பார்கின்ற்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு  வாக்குகளை அள்ளி வழங்க காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார் .

அமைச்சராக இருந்து கொண்டு குடி நீரை கூட எங்களுக்கு தராதவர்களுக்கு  வாக்குப் போட இனி ஒரு போதும் மனம் வராது . மக்கள்  ரவூப் ஹக்கீம்  அமைச்சராக  வந்த பின்னர்  இனி எங்களுக்கு குடி நீர் பிரச்சினை வராது என்றிருந்தனர்  ஆனால்  எங்களின் தாய்மாரை  அவரும்  அவரது அரசியல் அருவருடிகளும் ஏமாற்றிவிட்டனர் . இன்னும் தொடர்ந்து ஏமாற்றப் பார்கின்றனர்  அவர்களின் பசப்பு வார்த்தைகள் இனி ஒரு போதும்  எமது மக்களிடத்தில் எடுபடாது  எனவும்  இணைப்பாளர்கள்  இனி சீராக குடிநீர் கிடைக்கும் என்ற  பொய் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர் . இதனை மக்கள் ஒரு போதும் நம்புவதற்கு தயார் இல்லை என்றார் .
அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இப்போது அம்பாறை மாவட்டத்தில் அலை வீசுகிறது . கடந்த  ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எவ்வாறு மகிந்தவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று  வரிந்து கட்டிக்கொண்டு  எதிர்த்து வாக்களித்தார்களோ  அதே போன்று  இந்த பொது தேர்தலிலும்  முஸ்லிம்  காங்கிரசை  வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று  களம் இறங்கியுள்ளனர் .

 மக்களின் இந்த ஆவேசத்தை  எவராலும் தடுத்து நிறுத்த முடியாதென்றும் முஸ்லிம்களின் ஏகோபித்த தலைவர் றிசாத் பதியுதீன்தான்  என்பதையும்  எதிர்வரும்  ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிருபிக்கவுள்ளனர் எனவும்  முபீத் தனது உரையில் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top