சம்மாந்துறையைச் சேர்ந்த சபீக் என்ற இளைஞன் மண்டூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்  
மண்டூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அண்மையில் வழங்கிய சிற்றுாழியர் நியமனம் பெற்ற 28 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மேற்படி பாடசாலைக்கு திங்கட்கிழமை (20) இரவு காவலுக்கு சென்ற இந்த இளைஞன் கதிரையில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு  பாடசாலைக்கு வந்த மாணவர்கள்  அழைத்துள்ளனர். இதன்போது, இக்காவலாளி எதுவும் பேசாமல் இருந்தமையால், ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு மாணவர்கள்  தெரியப்படுத்தினர். இந்த நிலையில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்து சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த ஊழியரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிசாரினால் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது 

கருத்துரையிடுக

 
Top