எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து தீர்மானிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் இன்று கூடவுள்ளது.கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று இரவு கூடி இது குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு அடிப்படையான புரிந்துணர்வு உடன்பாடு உள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுத் தேர்தலுக்காக முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

 
Top