(பி.எம்.எம்.ஏ.காதர்;)

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையின் இப்தார் நிகழ்வும்  மார்க்கச் சொற்பொழிவும்  மருதமுனை கிளையின் புதிய மர்க்கஸ் வளாகத்தில் கிளையின் தலைவர் ஏ.ஆர்.எம்.இக்பால் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆசிரியர் அமீர் இர்ஸாத்  புனித றமழான் நோன்பு பற்றிய விஷேட உரையாற்றினார். இங்கு கிளையின் உறுப்பினர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் கழகங்களின் பிரதிநிதிகள் சமூக சேவையாளர்கள் ஊர்பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கருத்துரையிடுக

 
Top