battinews இணையத்தளத்தில் இன்று வெளியான இந்த செய்தியை kalmunainews இணையத்தளம் மறுக்கிறது . குறித்த செய்தியாளர் சந்திப்பு எப்போது எங்கு நடை பெற்றது?  battinews இணையத்தில் வெளியான இந்த புகைப்படம்  திகட் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தபோது  அம்பாறை கச்சேரியில்  வைத்து தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு வழங்கப் பட்டது . அங்கு தயா கமகே   ஒரு வார்த்தை கூட கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சாலை தொடர்பாக பேசவில்லை . அவ்வாறிருக்க battinews இணையத்தில் வெளியான  கீழ் குறிக்கும் செய்தியை kalmunainews  இணையத்தளம் மறுக்கிறது . இது தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்கான ஒரு நாடகமாகும் 
http://www.battinews.com/ கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சாலை சகல வச­திகளும் கொண்­ட­தாக மாற்­றப்­படும் -  தயா கமகே

கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சா­லையை சகல வச­தி­களும் கொண்ட,
வைத்­தி­ய­சா­லை­யாக மாற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் தயா கமகே தெரி­வித்தார்.
கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்தி தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,
கல்­முனை வடக்கு வைத்­தி­ய­சாலை அபி­வி­ருத்­திக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதியை மற்­று­மொரு வைத்­ தி­ய­சா­லைக்கு மாற்­று­வ­தற்கு முன் னாள் சுகா­தார
இரா­ஜாங்க அமைச்சர், ஹசன் அலி­யினால் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக கல்­முனை வடக்கு வைத்­தி­ய­சாலை பகுதி மக்­களால் என்­னிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. ஆனால் ஒரு அபி­வி­ருத்­திக்­கென நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்பின் அதனை மற்­று­மொரு வைத்­தி­ய­சா­லைக்கு மாற்ற முடி­யாது எனக் கூறிய நான், இவ்­வி­டயம் தொடர்­பாக நாம் பேசி முடி­வெ­டுப்போம் என தெரி­வித்தேன். ஆனால் மேல­திக எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் நான் மேற்­கொள்­ள­வில்லை. இத­னையே நான் திருக்­கோ­விலில் நடை­பெற்ற கூட்­டத்­திலும் தெளி­வாகக் கூறினேன்.
ஆனால் கல்­முனை அஷ்ரப் வைத் ­தி­ய­சா­லைக்கு ஒதுக்­கி­ய­தாகக் கூறப்­படும் நிதியை என்னால் மாற்­றப்­பட்­ட­தாக திரி­வு­ப­டுத்தி சில ஊட­கங்­களும் சில கட்­சி­யி­னரும் என் மீது சேறுபூசும் செயற்­பாட்டை முன் ­னெ­டுத்­துள்­ளதை நான் வன்­மை­யாக கண்­டிக்­கின்றேன்.
கல்­முனை அஷ்ரப் வைத்­தி­ய­சா­லையில் குறை­யாகக் காணப்­படும் விபத்துப் பிரிவு மற்றும் சத்­திர சிகிச்சைப் பிரிவு உட்­பட சகல பிரி­வு­க­ளுக்கும் தேர்தல் முடிந்­ததும் ஒரு வருட காலத்தில் நிதி ஒதுக்­கப்­பட்டு சகல வச­தி­களும் கொண்ட வைத்­தி­ய­சா­லை­யாக மாற்றித் தர முழு நட­வ­டிக்­கையும் மேற்­கொள்வேன்
எனினும் அம்­பாறை மாவட்­டத் தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு
தற்­போது ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சியை என் மீது சேறு பூசு­வதன் மூலம் நிவர்த்­திக்க முடி­யு­மென ஹசன் அலி போன்றோர் கரு­து­வது வெற்­றி­ய­ளிக் ­காது. நான் ஒரு இன­வா­தி­யல்ல. தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­களை ஒரே சம­மாக கருதி செயற்­ப­டு­பவன். கடந்த கால அரசின் போது பலம்­பொ­ருந்­திய அமைச்­ச­ராக இருந்த ரவூப் ஹக்­கீமால் முழு­மை­யாக கைவி­டப்­பட்­டி­ருந்த இந்த கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை, அபிவிருத்தியை இனியும் செய்வார்களா? எனவும் அவர் சவால் விடுத்தார்.
கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையின் சகல குறைபாடுகளை அப்பகுதி மக்களின் ஆலோசனைக ளைப் பெற்று நிவர்த்தி செய்வேன் என்றும் கூறினார்.

Post a Comment

 
Top