அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் அதி­யுயர் பீடம் இன்று செவ்­வாய்க்­கி­ழமை அதன் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மையில் கூடி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் இறுதி முடிவு எடுக்­க­வுள்­ள­தாக அக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரிய வரு­கின்­றது.
ஐ.தே.கட்­சியில் போட்­டி­யி­டு­வது தொடர் பில் எதிர்­வரும் 9 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரியவந்­துள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கொழும்பில் போட்­டி­யி­டு­வது தொடர் பில் இதுவரையில் தீர்­மானம் எத­னையும் எடுக்­க­வில்­லை­யென்றும் அம்­பாறை மாவட்­டத்­திலும் மன்னார் மாவட்­டத்­திலும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­த­தா­கவும் அத்­தோடு திரு­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, களுத்­துறை, அநு­ரா­த­புரம், குரு­நா­கல், புத்­தளம், வன்னி, யாழ்ப்­பாணம் போன்ற மாவட்­டங்­களில் போட்­டி­யி­டவும் தீர்மானிக்கப்பட்டுள்­ளது.
சில இடங்­களில் தனித்தும் சில இடங்­களில் ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்தும் யானைச் சின்­னத்­திலும் களமிறங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.இது தொடர்­பாக ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் முதலாம் கட்டப் பேச்சுவார்த்­தைகள் நடத்­தப்­பட்­ட­தா­கவும் இரண்டாம் கட்டப் பேச்­சு­ வார்த்­தைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும்  தெரி­ய­வ­ரு­கி­றது.

அதே­வேளை இன்று செவ்­வாய்க்­ கி­ழமை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தலை­மையில் இடம்­பெறும் கட்­சியின் அர­சியல் அதி­யுயர் பீட கூட்­டத்தில் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான இறுதி முடிவு எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அக்­கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரிய வருகி­றது.

கருத்துரையிடுக

 
Top