இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2013/2014 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான கலை,கலாசார, வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
பிரயோக விஞ்ஞான பீட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 08 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகும். விடுதி வசதிகள் பெறுவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திற்கு முந்திய தினம் பிற்பகல் 05 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

 
Top