எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுள்ள மாவட்டத்தில் 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நான்கு தொகுதிகளிலும் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 757 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென  464 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்ரமரட்ன தெரிவித்தார்.

இதன்படி அம்பாறை தேர்தல் தொகுதியில் 1,61,999 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 80,357 பேரும் கல்முனைத் தேர்தல் தொகுதியில் 71,257 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,52,147 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை தொகுதியில்  160 வாக்களிப்பு நிலையங்களும் சம்மாந்துறைத் தொகுதியில்  87 வாக்களிப்பு நிலையங்களும் கல்முனைத் தொகுதியில் 66 வாக்ளிளப்பு நிலையங்களும் பொத்துவில் தொகுதியில்  151 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top