(நஜீப் இப்றாஹிம்)

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலைக்குக் கிடைக்கவிருந்த சுமார் 25 கோடி ரூபா அபிவிருத்தியை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றிய பெருமை தனக்கே சேரும் என்றும் தான் தமிழ் மக்களின் விசுவாசி என்றும் ஆலையடிவேம்பில் நடைபெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.
முஸ்லிம் வைத்தியசாலையான அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கிடைக்கவிருந்த சுமார் 25 கோடி நிதியை எனது பெரும் முயற்சியினால் தமிழ் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளேன். அரசாங்கத்தின் மேல்மட்டத்துடன் கதைத்துத்தான் இதனை மாற்றியிருக்கின்றேன். சுகாதார ராஜாங்க அமைச்சுப் பதவி ஹசன் அலிக்கு இருந்தும் எனது திறமையை காட்டியுள்ளேன்.
முஸ்லிம்களினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதை என்னால் ஜீரணிக்க முடியாது. முஸ்லிம்களின் அதிகாரத்தை அடக்கியே தீருவேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்று அம்பாரை மாவட்டத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்படுவேன். ஒவ்வொரு தமிழ் பகுதியும் நிச்சயம் அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.
இதேவேளை, மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவின் இவ்வாறான இனவாத பேச்சுக்கும், செயற்பாட்டிற்கும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.நன்றி http://kalam1st.com/

கருத்துரையிடுக

 
Top