கடந்த புதன்கிழமையுடன் (15.07.2015) முடிவடைந்த தபால் வாக்கு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் வரை திகாமடுல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் 23218 தபால் வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்து ள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரம ரத்ன தெரிவித்தார்.
இவற்றுள் 20,494 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதுடன் 1977 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 747 விண்ணப் பங்கள் உரிய திகதிக்கு பிந்திக் கிடைத்தமையால் அவையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உரிய விண்ணப்பதாரி ஒப்பமிடாமை, விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட தகவல்கள் பிழையாக குறிப்பிடப்பட்டமை, திணைக்களத் தலைவர்களால் உறுதிப் படுத்தப்படாமை போன்ற பல்வெறு காரணங்களினாலேயே இவை நிராகரிக் கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப் பிட்டார்.
அத்துடன் 2014 ம் வருடத்திற்கான வாக்காளர் பட்டியல்களின்படி இம் மாவட்டத்தில் 4,65757 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய 4 தொகுதிகளிலும் 464 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் நிறுவப்படவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top