ஏ.பி.எம்.அஸ்ஹர்,யு.எம்.இஸ்ஹாக் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக  15 அரசியல் கட்சிகள் மற்றும்  20 சுயேச்சைக்குழுக்கள் சார்பாக  35 வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 04 வேட்புமனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்,  31 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான துசித பீ. வணிகசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸ கட்சி, ஜனநாயகக் கட்சி, ஜன செத்த பெரமுன, நவ சிஹல உறுமய, பொதுசன பெரமுன, ஐக்கிய மக்கள் கட்சி. ஐக்கிய சமாதான முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களும், 17 சுயேச்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு கட்சியின் வேட்புமனுவும் 03 சுயேச்சைக் குழுக்களின்   வேட்புமனுக்கள் முறையாக புரணப்படுத்தப்படாததினால் நிராகரிக்கப்பட்டன
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் முதன்மை வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் தயா கமகேயும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளர் ஹென்றி மகேந்திரனும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற மற்றும்  மாகாண சபை உறுப்பினருமான எம்.ஏ. அப்துல் மஜீத், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் முதன்மை வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

கருத்துரையிடுக

 
Top