பாடசாலை மைதானத்தை மீட்டுத்தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (11) இடம் பெற்றது.

பெரிய நீலாவணை  விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானத்திற்குரிய காணியை தனி நபர்களும், சில கழகங்களும் ஆக்கிரமித்ததை தடுக்கவே இக் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் பாடசாலைக்கு முன் அமைகியாக இடம் பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், விளையாட்டுக்கழகங்கள்,ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பெரிய நீலாவணை  பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு மைதானம் இதுதான் விளையாட்டுத்துறையில் நல்ல திறமைகளைக்காட்டக் கூடிய எங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி இம் மைதானத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீட்டுத்தருமாறு ஆர்ப்பாட்ட்தில் கலந்து கொண்ட பெற்றோர் கோசங்களை ஏழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மகஜர் ஒன்றினை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கல்முனை பொலிசாரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழங்கினர்.

இந்த ஆர்ப்பாடம் எதிர்கால அரசியலுக்காக ஒருசிலரால்  செய்யப்படுவதாகவும்  அவர்களின்  அரசியல் தேவையை  பூர்த்தி செய்ய  அமைதியாகவும் ,ஒற்றுமையாகவும்  இருக்கின்ற  முஸ்லிம்,தமிழ் மக்களை  குளப்பி விடுகின்ற  ஒரு செயலாக  கருதுவதாகவும் , இதே போன்றுதான்  கல்முனை மாநகர சபை தமிழர்களைப் புறக்கணிப்பு செய்வதாக  தெரிவித்து கடந்த மாதக் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்படுத்தப் பட்டது  இதற்கெல்லாம் பின்னணியாக  அடுத்த கட்ட அரசியலுக்குள் நுழைவதற்கு  முற்படும்  மாநகர சபை உறுப்பினர்  ஒருவரின்  குறுகிய அரசியல் சிந்தனைக்கு  கண்டனம் தெரிவிப்பதாக  மேலும் ஒரு மாநகர சபை  உறுப்பினர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top