( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் 2015 மற்றும் 2016 ஆம்ஆண்டுக்கான மாணவத்   தலைவர்களுக்கான பதவிப்பிரமாணமும்சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று கல்லூரி திறந்தவெளியரங்கில்மிகவும் விமரிசையாக 
இடம்பெற்றது.
கல்லூரி ஒழுக்காற்று சபைத் தலைவர் யு.எல்.எம்.இப்றாஹிம்தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர்பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் ,பிரதி அதிபர்களானஎம்.எஸ்.முஹம்மட் , .பி.முஜீன் , உதவி அதிபர்களானஎம்..எம்.அஸ்மி , எம்.எஸ்.அலிகான் , எம்.எச்.நௌபர் அலி ,மற்றும் ஆசிரியர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட மாணவத் தலைவராக கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவைச் சேரந்த எம்.எப்.எம்.இபாம் அஹமட் நியமிக்கப்பட்டதுடன்அவர் உள்ளிட்ட மாணவத் தலைவர்கள் சத்தியப் பிரமாணம்செய்ததுடன் அதிதிகளினால் மாணவத் தலைவர்களுக்கானசின்னங்களும் சூட்டப்பட்டன.
மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வினைமுன்னாள் ஒழுக்காற்று சபைத் தலைவரும் , தரம் 6 பகுதித்தலைருமான எம்.எஸ்.எம்.நுபைஸ் நெறிப்படுத்தினார்.Post a Comment

 
Top