(பி.எம்.எம்.ஏ.காதர்)

உலக வங்கியின் பதின்மூன்று மில்லியன் ரூபா நிதியில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நிர்மானிக்கப்படவுள்ள புதிய மூன்று மாடிக் கட்டித்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (08-06-2015) மதியம்  அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் நடைபெற்றது.
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கல்  வடிகால் அமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக்  கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இதில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர்  எம்.எஸ்.அப்துல் ஜலீல்,கிழக்க மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விசேட அழைப்பாளர்களாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி ஆகியோருடன் கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

 
Top