(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

அம்பாறை மாவட்ட  திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நேற்று   (13) அட்டா ளைச்சேனை  வலய, வங்கி அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

 கல்முனை திவிநெகும வலய உதவி முகாமையாளர்  எஸ். எல் . அஸீஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற  இன் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில்  திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின் அங்கத்தவர்களின் பதவி மேன்பாட்டு படிமுறைகள் தொடர்பாக அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளை சந்தித்து பரிந்துரைகளை மேற்கொள்ளும் விடயம், திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்தின்  நடவடிக்கைகளை கிழக்கு மாகாணம் முழுவதும் விஸ்தரித்து  கிழக்கு மாகாணம திவிநெகும வலய உதவி முகாமையாளர் ஒன்றியத்த்தை  ஸ்தாபிக்கும் விடயம்  என்பன கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

 மேலும் இவ் அமைப்பின் அடுத்த கூட்டம்  எதிர்வரும் ஜூலை மாதம்  25ஆம் திகதி  நிந்தவூரில்  இடம்பெறவுள்ளது.

Post a Comment

 
Top